தமிழகத்தைத் தவிர்த்து பிற மாநிலங்களில் "நீட்"டில் முறைகேடுகள் நடைபெறவில்லையா ? - நீதிபதி கேள்வி
நீட் தேர்வில் தமிழகத்தைத் தவிர்த்து பிற மாநிலங்களில் முறைகேடுகள் நடைபெறவில்லையா என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் முறைகேடு விவகாரத்தில் கைதாகியுள்ள கேரளாவைச் சேர்ந்த ரஷீத் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், " வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் கதையைப் போலதான் இந்த நிகழ்வு நடந்துள்ளது என்றார். 2018ஆம் ஆண்டு முதல் நீட் முறைகேட்டில் தமிழகத்தில் மட்டுமே கைதுகள் அரங்கேறியுள்ளதாகவும், மற்ற மாநிலங்களில் முறைகேடுகள் நடைபெறவில்லையா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்படி பிற மாநிலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சிபிஐக்கு அவர் உத்தரவிட்டார். நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வுகளில் மாணவர்களின் கைரேகையை பயோமெட்ரிக் முறையில் பெறுவது தொடர்பாக அகில இந்திய மருத்துவ கல்வி தகுதி தேர்வு வாரியம் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Comments